TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

225 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்.. திருஅண்ணாமலை:-
            பஞ்ச பூத ஸ்தலங்களில்“நெருப்பு” ஸ்தலமாக விளங்குவது திருஅண்ணாமலை... தென்கைலாயம் என்று அனைவராலும் அழைக்கப்படும்மலை திருஅண்ணாமலை..  ​நினைக்க முக்தி தரும் மலை திருஅண்ணாமலை. ஞானியர்களையும்,  தபோவனர்களையும்,  சித்தர்களையும் தன்னிடத்தே“வா”  என்று அழைக்கும்  மலை  திருஅண்ணாமலை... ​ மற்ற ஸ்தலங்களில் மலை மீது இறைவன்  இருப்பார்..   ஆனால் இங்கு இறைவன்  சிவபெருமான்” மலையாகவே காட்சி தருகிறார்.   இங்கு தான் அடிமுடிகாணா  அண்ணாமலையாக   சிவபெருமான்  தோன்றிதிருமாலுக்கும் பிரம்மாவுக்கும்ஜோதிப்பிழம்பாய் காட்சி அளித்து அவர்களின் ஆணவத்தை அழித்தார். இங்கு தான் தன்னுடைய உடலின் ஒரு பாதியை அன்னைஉமாதேவிக்கு தந்து அர்த்த நாரீஸ்வரராய்  காட்சி அளித்தார்...  இங்கு தான்ஸ்ரீ முருகப்பெருமான்   அருணகிரி நாதருக்கு  காட்சி அளித்து திருப்புகழை பாட செய்தார்.  18 சித்தர்களில்  ஒருவரான  இடைக்காட்டு சித்தர், ரமண மகரிஷி, சேஷத்திரி சுவாமிகள், குகை நமச்சிவாயர் போன்ற மகான்கள் உலகிற்கு அளித்தது இந்த  திருஅண்ணாமலையே..


இப்படிப்பட்ட அற்புதமான, அதிசயமான  மாபெரும் ஞானசக்தியினை கொண்ட இந்த திருத்தலத்தில் அண்ணாமலையின் அடிவாரத்தில், மலை ஏறும் வழியில்  அமைந்துள்ளது இந்த பழமைவாய்ந்த 

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்..

 
ஸ்ரீ சதானந்த யோகீஸ்வரர் :- 
          திருஅண்ணாமலை அடிவரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமமானது சுமார்  
200 ஆண்டுகளுக்கு முன்பு மகான் ஸ்ரீ சதானந்த யோகீஸ்வரரால்அமைக்கப்பட்டது.  இவர் இமய மலை முதல் கேரளா மலைகள், கொல்லி மலை, பழனி மலை போன்ற மலைகளில் தவமிருந்து பின் அண்ணாமலையாரின் அழைப்பினால் திருவண்ணாமலைக்கு வந்தடைந்தார்... இங்கு  ஆஸ்ரமம் அமைத்து சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பலவித ஆன்மிகப்பணிகளை  மேற்கொண்டு வந்தார். வாதம், வைத்தியம், ஜோதிடம் என ​பலகலைகளின் மூலம் மக்களுக்கு தொண்டாற்றினார். இவர் பல சித்து கலைகளை கற்றவர். இவர் சமாதி ஆகும் போது இவருக்கு வயது சுமார் 280க்கு மேல் என கூறப்படுகிறது.  இப்படிப்பட்ட மகானின் சீடர்களில் ஒருவராக வாலைச்சித்தர் அவர்களின் தந்தையான  பங்காரு அடிகளார் இருந்தார்... தந்தையின் மறைவுக்குப்பின் தன்னுடைய 21வது வயதில்  பிரம்மரிஷி. வாலைச்சித்தர் அவர்கள் ஸ்ரீ சதானந்த யோகீஸ்வரர் அவர்களால் பிரதான சிஷ்யரராக  ஏற்றுக்கொள்ளப்பட்டு  தன்னுடைய குருவிற்கு பணிவிடைகளும்,இறைத்தொண்டையும் செய்து  வந்தார். தன்னுடைய சிஷ்யரான வாலைச்சித்தரின் குருபக்தியில் மகிழ்ந்து தனக்கு தெரிந்த  வாதம், வைத்தியம், ஜோதிடம் போன்ற கலைகளை வாலைச்சித்தர் அவர்களுக்கு கற்றுத்தந்தார்.  லோகநாதன் என்ற இயற்பெயரை மாற்றிவ்ாதன் சிஷ்யருக்கு  பெயர் சூட்டியது ஸ்ரீ சதானந்த யோகீஸ்வரரே ஆவார்...

பிரம்ம ரிஷி. வாலைச்சித்தர் :- 
          ஸ்ரீ சதானந்த யோகீஸ்வரரின் மறைவுக்குப்பின் தன் குருநாதர் விட்டுச்சென்ற ஆன்மீகப்பணிகளை   பிரம்ம ரிஷி. வாலைச்சித்தர் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார். இவர் தன் குருவுடன் தமிழகத்தில் செல்லாத மலைகளே இல்லை என கூறலாம்.  இவர் தன் குருவுடன் பல மலைகளுக்கு சென்று அரிய பல மூலிகைகளைப்பற்றி அறிந்து வைத்துள்ளார்.  வாதம், வைத்தியம், ஜோதிடம் போன்ற கலைகளின் மூலம் ஜாதி, மதம், இனம், மொழி என எவ்வித பேதம் பாராமல் மக்களுக்கு தொண்டாற்றி வருகிறார். வாதம் என்பது ரசவாதத்தை குறிக்கும்...  ரசவாதம் என்பது திரவ உலோகமான பாதரசத்தை  (MERCURY)  அரிய மூலிகைகளின் மூலம் திடப்பொருளாக மாற்றம்
செய்யப்படும் ரசக்கட்டு வித்தையாகும். இப்படி கட்டப்பட்ட ரசகுளிகைகள் மூலம் தீராவியாதிகளை தீர்க்க முடியும். நவக்கிரக தோஷங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.  இப்படி பலவித நன்மைகளை ரசவாத த்தின் மூலம் பெறலாம்.  இந்த வாதத்தின் மூலமாகத்தான் நவப்பாஷாணத்தை
கட்ட இயலும்.  நவப்பாஷாணத்தை கட்ட முப்பு என்ற அரு மருந்து தேவை. இந்த முப்பை கண்டவர் பிரம்ம ரிஷி. வாலைச்சித்தர் அவர்கள்... தன் குருவின் அறிவுரையின் பேரில் ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தில் நவப்பாஷாண லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.  நவப்பாஷாணத்திலான சிலை 
தற்போது பழனியில் மட்டுமே முருகரின் வடிவில் உள்ளது.  மேலும், ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகப்பெருமான் சிலையும் ஒரு வித பாஷாணத்திலான சிலையாகும்.  இதை  பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீ சதானந்த யோகீஸ்வரர் ஆவார்.   இந்த முருகப்பெருமானின் அருளால் 
பலருடைய துன்பங்களை போக்கி வருகிறார் வாலைச்சித்தர் அவர்கள். 


   இப்படி ஸ்ரீ முருகப்பெருமானின் அருளாலும், தன் குருவின் ஆசியாலும் பலவித சேவைகளை செய்துவரும் பிரம்மரிஷி.வாலைச்சித்தர் அவர்களின் பெயரால்  1999 ஆம் ஆண்டு “ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமவாலைச்சித்தர் அறக்கட்டளை”என்ற தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
      

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமவாலைச்சித்தர் அறக்கட்டளை:-

( SRI DHANDAPANI ASRAMA VALAI SIDDAR TRUST)           
      இந்த சேவை நிறுவனத்தின் மூலம் இலவசமாக facebook, DVD மற்றும் நேரடி ஜோதிடக்கலை பயிற்சி,  இலவச சித்த மருத்துவ உதவி, அன்னதானம், சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தக தானம்,  மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு,  இலவச திருமண தகவல்கள் போன்ற சேவைகள் செய்யப்பட்டுவருகிறது.  ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம  வாலைச்சித்தர் அறக்கட்டளையின் சார்பில், கிரகபெயர்ச்சிகளின் போது உலக நன்மைக்காக மஹாயாகங்கள்  செய்யப்படுகிறது.  முறையாக ஜோதிடம் பயின்ற மாணவர் களுக்கு  மாபெரும் விழாவின் போதுஜோதிடப் பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.  ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் ஆன்மிகஅன்பர்களுக்கு ஆன்மிகப் பட்டங்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறது.

       ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையின் சார்பில் திருஅண்ணாமலையாரின் புகழை விளக்கும் திருவண்ணாமலை தல வரலாற்றை மூன்று பாகங்களாக 2004-ல்அருணாச்சல மகிமை, 2005-ல் ​திருஅண்ணாமலை தீபம், 2006-ல் ஆதிஅருணாச்சலம் என்ற பெயர்களில் மூன்று
தொலைக்காட்சி திரைப்படங்கள் தயாரித்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு DVD மூலமும்  இலவசமாக வழங்கப்பட்டது...

       ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையின் சார்பில் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை தரவல்ல, சர்வ ரோக நிவாரணியான “மூலிகைகளின் அரசன்” என கூறப்படும் ரிஷி (எ) கானோடெர்மா  காளானை சூரணமாக்கி காப்சூல் மாத்திரைகளாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதை உட்கொள்வதால் நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய், ​B.P., போன்றவை
 கட்டுக்குள் இருக்கும். புற்றுநோயை குணப்படுத்தும். ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையின் சார்பில்  மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பளித்து மூலிகைகளுடன் கூடிய  அரிசி அப்பளங்களை தயாரித்து உள்நாட்டு சந்தையுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன... உலகிலேயே முதன்முதலில் மூலிகைகளுடன் கூடிய  அரிசி அப்பளங்களை தயாரிப்பது இந்த  நிறுவனம் மட்டுமே.