அன்பார்ந்த ஆன்மிக அன்பர்களே...

    வணக்கம். திருவண்ணாமலை, ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை மற்றும் வாலைச்சித்தர் கல்வி அறக்கட்டளை சார்பில் தபால் மற்றும் நேரடி ஜோதிட பயிற்சி வகுப்புகள் முற்றிலும் இலவசமாக மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு முறையாக பதிவு செய்த

600 மாணவர்களுக்கு1 முதல் 3 பாடங்கள் கொண்ட ஜோதிடப் பயிற்சிக்கான  புத்தகமானது இலவசமாக தபால் மூலம் 11-08-2022 & 12-08-2022 ஆகிய தேதிகளில் அனுப்பபட்டது. விரைவில் இப்பாட தொப்பினை வீடியோ வடிவில் இலவசமாக அளிக்க உள்ளது. அத்துடன் செமினார் எனப்படும் நேரடி பயிற்சி வகுப்பும் நடைபெற உள்ளது.


அடுத்தகட்ட மாணவர் சேர்க்கையும் துவங்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் இ- படிவத்தை ( E-Form) பூர்த்தி செய்தால், இப்பயிற்சியில் முறையாக சேர தபால் மூலம் விண்ணப்படிவம் அனுப்பி வைக்கப்படும்.


1. இலவச ஜோதிடப் பயிற்சியின் காலம் ஒரு வருட்மாகும்.வயது வரம்பு - 18 முதல், கல்வித்தகுதி இல்லை.


2. ஜோதிட வகுப்பிற்கான 12 பாடங்களை மூன்று மூன்றாக பிரித்து நான்கு புத்தகங்களாக நான்கு தவணைகளாக தபால் மூலம் இலவசமாக அனுப்பபடும்.


3. புத்தகங்கள் வாயிலாக அனுப்பபடும் ஜோதிடப்பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள  சனி & ஞாயிற்று கிழமைகளில் (2-Days Seminar )  மொத்தம் நான்கு முறை நேரடி வகுப்புகள் திருவண்ணாமலையில் நடைபெறும்.


4. நேரடி வகுப்பில் (2-Days Seminar) கலந்துகொள்ளும் அன்பர்களின்  போக்குவரத்து, உணவு மற்றும் தங்கும் செலவுகள் யாவும் அவரவர்களை சார்ந்தது. வேண்டுமானால் குறைந்த தொகையில் உணவு மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.


5. நேரடி வகுப்பில் (2-Days Seminar ) கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.


6. வகுப்புகள் முடியும் தருவாயில் "வாட்ஸ்ஆப்" மூலம் கேள்விகளை அனுப்பபட்டு தேர்வு வைக்கப்படும். கேள்விகளுக்கான பதில்களை "வாட்ஸ்ஆப்" முலமாகவே எங்களுக்கு அனுப்பலாம்.  இதுப்பற்றிய விரிவான விபரங்களை பிறகு அறிவிப்போம்.


7. அனைவருக்கும் போட்டோவுடன் கூடிய ஜோதிட மாணவருக்கான அடையாள அட்டையும் வழங்கப்படும்.


8. தேர்வில் தகுதி பெறும் அன்பர்களுக்கு சான்றிதழ் ஒன்று நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும்.


9. வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் கீழே தரப்பட்டுள்ள இ-படிவத்தை

( E-Form) பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்படிவத்தை பெறலாம்.


10. இவ்வகுப்பில் சேர கடைசி நாள் 30-09-2022  ஆகும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள படமாட்டாது. ஏதேனும் விபரங்கள் தேவை எனில் அறக்கட்டளை அலுவலக செல் & வாட்ஸ்ஆப் எண்ணான +91-9894803009 ஐ தொடர்பு கொள்ளலாம்நன்றி.


அன்புடன்,
"ஆன்மிக செம்மல்" "ஜோதிட ரத்னா"
"செளமியன்"
சித்தர் மகன்.
Dr. L.
சீனிவாசன்
ஆசிரியர்
வாலைச்சித்தர் குருகுலம்,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்,
மலை ஏறும் வழி,
திருவண்ணாமலை
. 606 601.


இலவச தபால் & நேரடி ஜோதிட வகுப்பிற்கான
விண்ணப்ப படிவம் பெற இ-படிவம்.
( E-Form ).

TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

225 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

குறிப்பு :
மேற்காணும் விண்ணப்ப படிவத்தை பதிவு செய்ய முடியாதவர்கள் அறக்கட்டளை அலுவலக எண்ணான
+91-9894803009- க்கு தொடர்பு

கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

சிவப்பு நிறத்தில்* குறிப்பிடப்பட்டுள்ள  இடங்களை   கட்டாயம் பதிவு செய்தால் மட்டுமே "Submit"பட்டன் கறுமை நிறத்தில் மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக"பதிவு செய்ததற்கு நன்றி"என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.